இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகள் ஊழியர்கள் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
அதன்படி, IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் சீர்திருத்த திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
IMF நிர்வாகக் குழுவால் மதிப்பாய்வு அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கை தோராயமாக 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.










