கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
13.01.2024 சனிக்கிழமை இரவு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகி இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜமீல் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு உறவினர்களால் சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து, அவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதுடன், மேலதிக மேலதிக விசரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டதன் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.