ஐ. ஏ. காதிர் கான்
கட்டுநாயக்க அதிவேக வீதியின் 11 ஆம் மைல்கல் பகுதிக்கருகில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த வாகனச் சாரதி இராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சனத் நிஷாந்தவின் ஜீப், அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் வீதி பாதுகாப்பு வேலியிலும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வாகனச் சாரதி ஆகியோர் இராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சரும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில், கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












