வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசல்
09.12.2025
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் வேண்டுகோளிற்கிணங்க , 09.12. 2025 செவ்வாய்க்கிழமை வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய மத பிராத்தனை நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மத மற்றும் கலாச்சார விவகாரத் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலாஃபர், சிறப்பு விருந்தினராக பிரதி சபாநாயகர் கௌரவ டாக்டர் ரிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டனர். மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் (மத விவகாரங்கள்), பிரதம நிதி உத்தியோகத்தர், சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள ,வக்ப் சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தப்லீக் மர்கஸின் உறுப்பினர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள்,கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளன உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள்; கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் வெள்ளவத்தை குர்ஆன் மதரஸாவின் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அன்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவில் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட வர்களுக்காகவும் தாய்த்திருநாட்டின் அபிவிருத்தி ,சுபீட்சத்திற்காகவும் சிறப்பு துஆ பிரார்த்தனைகள் நடாத்தப்பட்டதுடன், விஷேட உரைகளும் இடம் பெற்றன.
வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் அல் ஹஜ் பீர்கண்ணு ரிஸ்வி மற்றும் நம்பிக்கையாளர் சபை இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










