சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 06.02.2025 காலை 10.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்க விளையாடுவார் என்று இலங்கை அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக பெத்தும் நிசங்க முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.
இன்றைய போட்டியில் இலங்கை அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளீர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இன்றைய போட்டியுடன் இலங்கை அணியின் வீரர் திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இன்றைய போட்டி திமுத் கருணாரத்னவின் 100வது டெஸ்ட் போட்டியுடன், அவரது இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியும் ஆகும்.
இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.