மலையக ரயில் சேவைகள் இன்றும் (22) மட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி முதல் கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் பொல்கஹவெல இடையேயான 10 ரயில் பயணங்கள் இன்று காலை இரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை முதல் பதுளை இடையே இன்று காலை இயக்கப்படவிருந்த ரயில் சேவைகள் பேராதனை மற்றும் பதுளை இடையே மாத்திரம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மலையக ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று மதியம் 12.00 மணிமுதல் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.










