இந்தோனேஷியாவின் பண்டா கடற்கரையில் 6.4 ரிச்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 137 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந் நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லையென அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.










