(அஷ்ரப் ஏ சமத்)
இந்திய வீடமைப்புக் கிராமான மாகத்மா காந்தி வீடமைப்புக் கிராமம் அம்பாறையில் அக்டோபர் 29ஆம் திகதி புதன் கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
அக்டோபர் 30 ஆம் திகதி வியாழக்கிழமை பொலன்நருவையிலும் நிர்மாணிக்கப்பட்ட ”சுகந்தகம எனும் வீடமைப்புக் கிராமம் திறந்துவைக்கப்படவுள்ளது.
இவ் வைபவத்தில் இந்திய உயர் ஸ்தாணிகர் சந்தோ ஜா மற்றம் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சர். மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் பிரதேச மக்கள் பிரநிதிகள் வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஆகியோர்களின் பங்களிப்புடன் நாளையும் நாளை மறுதினமும் இக் கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது ஒவ்வொரு கிராமத்திலும் 24 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன
இவ் வீடமைப்புக் கிராமங்கள் இந்திய நன்கொடையில் நிதி உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் நாலா பாகங்களிலும் வீடமைப்புக் கிராமங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் திட்டத்தினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உதவி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மலையக தோட்ட வீடமைப்புத் திட்டம் வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்திய வீடமைப்பு திட்டங்கள் மற்றம் ஏனைய பிரதேசங்களிலும் மாதிரிக்கிராமங்களையும் இந்திய நிதி உதவியிளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் அஷ்ரப் ஏ சமத்
சிரேஷ்ட முகாமையாளர்
தகவல் மற்றும் பிரச்சாரம்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை










