இந்தியா-பாகிஸ்தான் இடையே உருவான போர் சூழ்நிலையில், பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்குச் சொந்தமான மற்றும் குத்தகை அடிப்படையிலான விமானங்கள் உள்ளிட்ட அனைத்து வகை விமானங்களுக்கும் தங்களது வான்வெளியை பயன்படுத்த தடைவிதித்தது.
இத்தடை ஆகஸ்ட் 25ஆம் திகதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் விமான போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு பதிலடியாக, இந்திய அரசு ஏப்ரல் 30ஆம் திகதி முதல் பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வான்வெளியை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

July 19, 2025
0 Comment
58 Views