இலங்கையை சேர்ந்தவரும் தற்போது ஐக்கிய அமெரிக்காவில் தொழில் வல்லுனராக செயற்பட்டு வருகின்ற சமூக ஆர்வலர் ருஸ்துன் ரம்ஸி அவர்களினால் இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை அகதி மற்றும் வறுமை பிள்ளைகளுக்கான உதவிக்கரங்களை மேற்கொண்டார்.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நிதியத்தின் ஸ்தாபகரும், சமூக ஆர்வலருமான முகவை Dr. S. கோவிந்த ராஜ் அவர்களினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் ருஸ்துன் ரம்ஸி உரையாற்றுகையில் தன்னால் முடியுமான உதவிகளை செய்து தருவதுடன் அப்துல் கலாம் அறக்கட்டளை பணிகளை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தினார் .