இஸ்மதுல் றஹுமான்
இலங்கையின ஒரு பலம்வாய்ந்த பாதாள உலகக் கும்பல் உறுப்பினரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான "பொடி லெஸீ" என்று அழைக்கப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா 27ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் இலங்கை விசேட பொலிஸ் குழுவினரால் இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட “பொடி லெஸீ” இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் இன்டர்போலின் தலையீடு மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
2024 ஆண்டு டிசம்பர் 9ம் திகதி நீதிமன்றம் மூலம் பிணை வழங்கப்பட்ட பின்னர் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற பொடி லெஸீ ஜனவரி 2025 இல் இந்தியாவின் மும்பையில் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் மும்பையில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல்.-142 இலக்க விமானம் மூலம்
27 ஆம் தேதி அதிகாலை 5.55 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இங்கு அழைத்து வரப்பட்ட பொடி லெஸீ கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைக்காக எல்பிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.










