இலங்கையில் உப்பு இறக்குமதி தாமதம் மற்றும் உள்ளூர் உற்பத்தி பாதிப்பு காரணமாக கடுமையான உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சந்தையில் உப்பின் சில்லறை விலை கிலோவுக்கு 400 ரூபாவாக உயர்ந்துள்ளது.
உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக ஆராசிங்க, அரசாங்கம் 30,000 மெட்ரிக் டன் அயோடின் சேர்க்கப்படாத உப்பை இறக்குமதி செய்ய அனுமதித்த போதிலும், மெதுவான இறக்குமதி செயல்முறை காரணமாக சந்தை நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை என தெரிவித்தார்.
அரச தரப்பு பேச்சாளர் ஒருவர், இந்தியாவிலிருந்து விரைவில் உப்பு கப்பல் வந்து சேரும் எனவும், இரண்டு வாரங்களுக்குள் நிலைமை சீராகி விலைகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினார். இதற்கிடையில், உள்ளூர் உப்பு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன