இஸ்மதுல் றஹுமான்
இந்தியப் பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பரை கொழும்பில் சந்திதது கலந்துரையாடியது.
இந்தியாவின் புகழ்பெற்ற லொயலா பல்கலைக்கழகத்தின் (Loyola College, Chennai) சமூக சேவை தொடர்பான முதுமாணி பட்ட மாணவர்கள் 50 பேர் கொண்ட குழுவொன்று கொழும்பில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பரை சந்தித்து இலங்கையின் சமய மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மை குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.
இந்த மாணவர் குழுவுடன் நடைபெற்ற இச்சினேகபூர்வமான சந்திப்பின்போது
நாட்டில் நிலவும் பல்வேறு சமய மற்றும் கலாசார நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் செயற்படும் விதம் குறித்து ஆழமாக ஆராயப்பட்டது.
இங்கு இலங்கையில் பல சமயங்களையும் பலவேறு கலாசாரங்களை பின்பற்றும் சமூகத்தை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சமய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தப் பங்களித்த காரணிகள் குறித்து பிரதி அமைச்சரினால் மாணவர் குழுவினரிடம் விரிவாக விளக்கப்பட்டது.
இலங்கையின் பல்வேறு பிரிவுகளுடன் கல்விசார் உரையாடல்களில் ஈடுபட்ட இந்த இந்தியப் பல்கலைக்கழக மாணவர்களின் விஜயத்தின் பிரதான நோக்கம், இலங்கையின் கலாசாரக் கொள்கைகள் மற்றும் சமூகக் கட்டமைப்பு குறித்து நேரடி அறிவைப் பெறுவதாகும்.
இந்தச் சந்திப்பின் இறுதியில் இந்திய மாணவர் குழுவிற்கு இத்தகைய பெறுமதியான வாய்ப்பை வழங்கியமைக்காகவும், தேசிய நல்லிணக்கம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து விளக்கமளித்தமைக்காகவும்லொயலா பல்கலைக்கழ விரிவுரையாளர்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பருக்குத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.












