ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையான காலப் பகுதியில் 85,000 விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் நாட்டுக்குள் நுழைபவர்கள் தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் இதுவரையில் சுமார் 85,000 விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, நாட்டின் குடிவரவு கொள்கை மற்றும் எல்லை பாதுகாப்பை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இரத்து செய்யப்பட்ட 85,000 விசாக்களில் 8000 விசாக்கள் மாணவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.










