மேல் மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10 ஆம் மற்றும் 11 ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06) முதல் மீண்டும் நடைபெறுகின்றன.
தவணைப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கு முன்னதாக அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










