இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் Aloor Sha Navas அவர்களை சமூக நீதிக் கட்சியின் பிரதிநிதிகள் 29.05.2025 வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்தனர்.
இதன்போது சமகால இலங்கை – இந்திய அரசியல் நிலவரங்கள் குறித்தும், இரு நாடுகளிலும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சமூக நீதிக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர், தேசிய அமைப்பாளர் இர்பான் அஹமத், ஊடக செயலாளர் அன்ஷாக் அஹமத் மற்றும் சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.