ஜனவரி 2025, இறாகமை: இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரே பல்துறை நிலையமான ஆயதி நிறுவனமானது, தேசத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட தனது ஐந்தாண்டு சேவையை பெருமையுடன் கொண்டாடுகின்றது. களனிப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மாற்றுத்திறன் கற்கைகள் துறையுடன் இணைந்த ஆயதி நிலையம் நாடு முழுவதிலும் இருந்து 14,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச, விரிவான தலையீடுகளை வழங்கியுள்ளது, இது ஓர் அடித்தளமான பொது-தனியார் முயற்சியை எடுத்துக்காட்டுகின்றது.
ஏறக்குறைய 20% இலங்கைச் சிறுவர்கள் – ஐந்தில் ஒருவர் சில வகையான அங்கவீனம் அல்லது குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்வதாக சுகாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். ஆரம்பகால அடையாளம் மற்றும் தலையீடு இந்தக் குழந்தைகளின் முழுமையான திறனை அடைவதற்கும், சமூகத்தில் மதிப்புமிக்க பங்களிக்கும் உறுப்பினர்களாக ஒருங்கிணைப்பதற்கும் உதவுகின்றது. எந்தவொரு வேலை நாளிலும், கிட்டத்தட்ட 100 குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஆயதி நிலையத்தில் சேவைகளைப் பெறுகின்றனர்.
களனிப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் முக்கிய தனியார் துறை பங்களிப்பாளர்களுக்கு இடையிலான கூட்டுப் பங்காண்மையின் மூலம் ஆயதி நிலையமானது நிறுவப்பட்டது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ரோஷன் விஜேராம ஃபேமிலி ஃபவுண்டேஷன் ஆகியவை முக்கிய நிதிசார்ந்த பங்காளர்களாகச் செயல்பட்டனர், ஒருமைப்பாடான பல்சிந்தனை கொண்ட நிறுவனங்களால் இந்நிலையமானது ஆதரிக்கப்பட்டது. இந்த நிலையம் MICD அசோசியேட்ஸ் மற்றும் தீபால் விக்கிரமசிங்க அசோசியேட்ஸ் ஆகியவற்றால் இலவசமாக வடிவமைக்கப்பட்டது, அதேநேரத்தில் இந்நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டன, இது உண்மையிலேயே குறுக்குவெட்டு முயற்சியைக் காட்டுகின்றது. இந்த நிலையம் ஜனவரி 25, 2020 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
ஆயதியில் நிபுணத்துவ சேவைகள் முதன்மையாக மருத்துவ பீடம், களனி பல்கலைக்கழகம் மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்களால் வழங்கப்படுகின்றன. ஆயதி நம்பிக்கை இலங்கை நிதியம் இந்த அத்தியாவசிய சேவையின் நிலைத்தன்மையை உறுதி செய்து, அன்றாட நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கிறது.
ஆயதி பலதரப்பட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதுடன், குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்குப் பலதரப்பட்ட சேவைகளை வழங்குகின்றது. பிறந்த குழந்தை முதல் இளம் வயது வரை அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த நிலையமானது, டிஸ்லெக்ஸியா மற்றும் நடத்தைசார் கோளாறுகள் போன்ற பெருமூளை வாதம், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, பேச்சு மற்றும் மொழி தாமதம், தகவல் தொடர்பு கோளாறுகள், கட்புல மற்றும் செவிப்புலக் குறைபாடுகள், விழுங்குவதில் சிரமம், நடைசார்ந்த குறைபாடுகள், உணர்ச்சிசார் கோளாறுகள், அறிவுசார் கோளாறுகள் கற்றல்சார் சிரமங்கள், உள்ளிட்ட நிலைமைகளுக்கு மதிப்பீடுகள் மற்றும் தாமாகவே முன்வந்து செயற்பாடுகளை வழங்குகின்றது.
ஒரு பயிற்சியளிக்கும் நிலையமாக, ஆயதி இளமாணி மற்றும் முதுமாணி மருத்துவர்கள், பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சையாளர்கள், ஆடியோலஜிஸ்டுகள், இயன்மருத்துவர்கள், தொழில்சார் சிகிச்சையாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களையும் தயார்படுத்துகின்றது. இந்த நிலையம் சிறப்புப் பிரிவுகளைக் கொண்டுள்ளது: வளர்ச்சி குழந்தை மருத்துவம் மற்றும் குழந்தை மனநல மருத்துவம்; பேச்சு மற்றும் மொழி சிகிச்சை; குழந்தை வளர்ச்சி மற்றும் மருத்துவ உளவியல்; இயன் மருத்துவம் (பிசியோதெரபி), தொழில்சார் சிகிச்சை மற்றும் ஒலியியல், ஒலியியல் ஆய்வகங்கள் என விரிவான செவிப்புலன் மற்றும் சமநிலை மதிப்பீடுகளுக்கான மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. இயன் மருத்துவப் பிரிவில் செலவு குறைந்த நடை ஆய்வகமும் அடங்கும். மேலும், தொழில்சார் சிகிச்சைப் பிரிவில் உணர்ச்சி ஒருங்கிணைப்பு சிகிச்சையை ஆதரிக்க ஓர் உணர்ச்சி அறை மற்றும் ஸ்னோசெலன் சூழலைக் கொண்டுள்ளது.
பொது மட்டத்தில், அறங்காவலர்கள் மற்றும் நிலையத்தின் ஊழியர்கள், நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட குழந்தைகளின் பெற்றோருடன் இணைந்து, குழந்தைப் பருவ இயலாமையின் பெரும்பாலான வடிவங்களில் இன்னும் வலுவாக இணைக்கப்பட்டுள்ள எதிர்மறையான சமூக முத்திரைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். அத்தகைய எதிர்மறையான சமூக முத்திரைகள் குழந்தைகளின் முழுமையான திறன்களை அடைவதைத் தடுக்கின்றன.
ஆயதி நிலையத்தின் சாதனைகள் பல இருந்தபோதிலும், இந்நிலையமானது குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது, தொழில்முறை பணியாளர்கள் பற்றாக்குறை உட்பட, பெரும்பாலும் நாட்டை பாதிக்கும் மூளை வடிகால் காரணமாக. அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகள் இந்நிலையத்தின் வளங்களை மேலும் கடினப்படுத்தி, கூடுதல் ஆதரவுக்கான அழுத்தமான தேவையை உருவாக்குகின்றது. ஆயதி அறக்கட்டளை தற்போது அதன் முக்கிய நிதி பங்காளர்களான ஹேமாஸ், MAS, விஜேராம குடும்ப அறக்கட்டளை, ரோஷன் மஹாநாம அறக்கட்டளை மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களின் பங்களிப்புகளை அதன் செயல்பாடுகளை நிலைநிறுத்துவதற்கு நம்பியுள்ளது. இந்த இன்றியமையாத தேசிய வளம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்காக, “ஆயதியின் நண்பர்கள்” முயற்சியில் சேர நன்கொடையாளர்களை ஆயதி அழைக்கின்றது. தற்போது முழுத் திறனுடன் செயல்படும் ஆயதி நிலையம், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு சேவை செய்வதில் உறுதியாக உள்ளது, ஆனால் வளக்கட்டுப்பாடுகள் காரணமாக புதிய வாடிக்கையாளர்களின் கணிசமான வருகைக்கு இடமளிக்க முடியாது. ஆயதியின் சேவைகளை அணுக விரும்பும் குடும்பங்கள், சிரமத்தைத் தவிர்க்க, முன்கூட்டியே சந்திப்புகளை முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அணுகுமுறை ஆயதியின் பராமரிப்பில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் மிக உயர்ந்த தரமான பராமரிப்பைப் பெறுவதற்கு அனுமதியளிக்கின்றது.