ஆகஸ்ட் 1 முதல் 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஜப்பான், தென் கொரியா, மலேசியா, கசக்கஸ்தான், தென்னாப்பிரிக்கா, லாவோஸ் மற்றும் மியன்மார் மீதான புதிய வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக அறிவித்திருந்தார்.
அதன்படி, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, கசக்கஸ்தான் மற்றும் துனிசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும்.
தென்னாப்பிரிக்கா மற்றும் பொஸ்னியா பொருட்கள் 30 சதவீத வரிக்கு உட்பட்டவை என்றும் இந்தோனேசியா 32 சதவீத வரிக்கு உட்பட்டவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் மற்றும் சேர்பியா ஆகிய நாடுகளில் 35 சதவீத வரிகளையும், கம்போடியா மற்றும் தாய்லாந்தில் 36 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், லாவோஸ் மற்றும் மியான்மாரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.