அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களின் ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு 30 ஆம் திகதி வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி 3,003,840,000.00 ரூபாய் நிதி பயனாளிகளின் 600,786 கணக்குகளுக்காக வைப்புச் செய்யப்படும்.
சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஜூலை 30 ஆம் திகதி முதல் தமக்கான நலன்புரிப் பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கு ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.