அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் 06.08.2025 புதன்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆளுநர் நாயகம் ஓகஸ்ட் மாதம் 6 முதல் 10 வரை நாட்டில் இருப்பார்.
இந்த விஜயத்தின் போது, ஆளுநர் நாயகம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
அத்துடன் பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் அவுஸ்திரேலியாவால் ஆதரிக்கப்படும் பல திட்டங்களையும் ஆளுநர் நாயகம் பார்வையிடவுள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைகளுக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது ஆகும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.