ஏ.எஸ்.எம்.ஜாவித்
இலங்கை ஜம்இய்யதுல் குர்ரா அமைப்பினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட அல் குர்ஆன் மனனப் போட்டியின் வெற்றியாளர்களில் இருவர்இ லிபியாவில் நடைபெறும் சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டிக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அல் ஹாஃபிழ் ஃபர்ஷாத்இ கொழும்பு குல்லியத்துல் இமாம் ஷாபிஈ மத்ரஸாவைச் சேர்ந்தவர். இவர் அல்குர்ஆன் மனனம் மற்றும் தஃப்ஸீர் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அல் ஹாஃபிழ் சுலைமான், கல்ஹின்னை ஜாமிஅத்துல் ஃபத்தாஹ் அரபுக் கல்லூரியைச் சேர்ந்தவர். இவர் அல்குர்ஆன் மனனப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
லிபியாவில் நடைபெறும் இப்போட்டியில் 65க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவர்களை கௌரவிக்கும் வகையிலும்இ சர்வதேசப் போட்டிக்கு வழியனுப்பி வைக்கும் வகையிலும் நேற்று (17.09.2025) கொழும்பில் விசேட நிகழ்வொன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர்களுக்கான வீசா மற்றும் பயனச் சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜம்இய்யதுல் குர்ராவின் தலைவர் அஷ் ஷைஹ் காரி ரிப்ராஸ் அல் அஸ்ஹரிஇ உப தலைவர் அஷ் ஷைஹ் காரி பவாஸ் மற்றும் செயலாளர் அஷ் ஷைஹ் காரி பிர்னாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவர்கள் இருவரும் இன்று காலை லிபியா நோக்கி பயணமாகினர்