ஐ. ஏ. காதிர் கான் –
ஈழத்து இலக்கியத்தின் முன்னோடி, அருள் வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப் பேருரை, கொழும்பு – 09 தெமட்டகொடை வீதி அகில இலங்கை வை.எம்.எம் .ஏ. பேரவை யின் கேட்போர் கூடத்தில், (30) வியாழக்கிழமை கவிஞரும் எழுத்தாளருமான “காப்பியக்கோ” டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ளது.
அன்றைய தின நினைவுப் பேருரையை, மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான திரு. மயில்வாகனம் திலகராஜா நிகழ்த்தவுள்ளார்.
இச்சிறப்பு நினைவுப் பேருரையில், இலங்கையின் மூத்த இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.