நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள அடிப்படை பிரச்சினையே கீரி சம்பா அரிசியின் தற்போதைய பற்றாக்குறைக்கு காரணம் என்று தொழிலதிபர், அரலிய அரசி நிறுவன உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த கருத்தைத் வெளியிட்டுள்ளார்.
அதிக விலைக்கு அரிசி விற்பனை இதற்கிடையில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வணிகங்களைக் கண்டறிய நுகர்வோர் அதிகார சபை (CAA) தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றது.
சம்பா அரிசியை கிலோ கிராமுக்கு ரூ.310க்கு விற்பனை செய்த விற்பனையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.










