தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் 31.01.2026 நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 48 மணிநேரக் கால அவகாசம் முடிவடைந்த போதிலும், அரசாங்கம் இதுவரை சாதகமான எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.










