இஸ்மதுல் றஹுமான்
பிரவ்னின் வகை துப்பாக்கி மற்றும் நான்கு சன்னங்களை நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினர் கைபற்றியுள்ளனர்.
புலனாய்வு துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கட்டான, கந்தவல, ஐவன் டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள கட்டான பிரதேச சபைக்கு சொந்தமான வெற்றுக் காணியில் இருந்து இந்த துப்பாக்கி கைபற்றப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக்க தர்மசேனவின் ஆலோசனையில்
நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன ரணசிங்கவின் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சரத், பொலிஸ் கான்ஸ்டபல்களான வன்னிநாயக்க (37928), சனஞீவ (33113) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் இதனை கைபற்றினர்.
பெல்ஜியம் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கை துப்பாக்கி மற்றும் 9 மி.மீ.நான்கு சன்னங்களும் செயல்பட கூடிய விதத்தில் உள்ளதாக கூறிய பொலிஸார் ஏதும் குற்றச் செயல்களை செய்வதற்காக இங்கு மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசேட பொலிஸ் குழு ஒன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.