புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
இதனடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களாக
பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாடு
அனுர கருணாதிலக்க – துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து
சுசில் ரணசிங்க – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பொறுப்பாகவும் பிரதி அமைச்சர்களாக,
கலாநிதி அனில் ஜயசிங்க – திட்டமிடல் பிரதி அமைச்சர்,
டி.பி சமன் – வீடமைப்பு, நீர் வழங்கல் பிரதி அமைச்சர்,
எம்.எம்.மொஹமட் மூனீர் – மதவிவகார கலாசார பிரதி அமைச்சர்,
டாக்டர் முதித்த ஹங்சக விஜயமுனி – சுகாதார பிரதி அமைச்சர் ,
அரவிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்,
எச்.எம்.தினிது சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்,
யு.டி.திசாந்த ஜயவீர – பொருளாதார பிரதி அமைச்சர்,
கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன – ஊடக பிரதி அமைச்சர்,
எம்.ஐ.எம். அர்க்கம் – எரிசக்தி பிரதி அமைச்சர்.










