அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்படும் பணி நீக்கங்கள் காரணமாக, நாட்டில் குறைந்த வேதனத்துடனான உழைப்பு உருவாகக்கூடும் எனப் புதிய ஆய்வொன்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பினால், தைக்கப்பட்ட ஆடைத்துறையை சேர்ந்த 16,000 பணியாளர்கள் தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாயம் மற்றும் ஏனைய பல தொழில்துறைகளுக்கான மலிவான கொடுப்பனவுகளை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பயிற்றப்படாத தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் ஏனைய துறைகளும் பாதிப்படையலாம் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, தைக்கப்பட்ட ஆடைத்துறையில் 15,850 மேற்பட்ட பணிகளில் அனுபவமற்ற பெண் தொழிலாளர்களால் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










