அமெரிக்காவின் மத்திய பகுதியிலுள்ள டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது.
புயல் காரணமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இடிபாடுகளில் சிக்கி 100ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புயலினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், வீடுகளுக்கு வெளியில் நின்ற பல மகிழுந்துகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அத்துடன் புயலினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மின்சாரத் துண்டிப்பு காரணமாக சுமார் 5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.