பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன, ஒவ்வொரு அரசு நிறுவனத்திலும் கைரேகை இயந்திரங்கள் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகங்கள் உட்பட பல நிறுவனங்களில் கைரேகை இயந்திரங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
கடமைக்கு சமுகமளிப்பதில் முறைகேடுகளைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.