இஸ்மதுல் றஹுமான்
நாட்டு மக்களை கடன்காரர்களாக்க மாட்டோம் என அரசியல் மேடைகளில்
கூறிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த சில தினங்களுக்குள் 400 பில்லியனுக்கும் அதிகமாக கடனை பெற்று மக்களை கடன் காரர்களாக ஆக்கியுள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கம்பஹா மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் இம்முறை போட்டியிடும் நிமல் லான்சா தெரிவித்தார்.
நீர்கொழும்பு கடற்கரை தெருவில் அமைந்துள்ள அவரது காரியிலயத்தில் சனிக்கிழமை நடாத்திய ஊடகவியளாலர் சந்திப்பிலையே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
லான்சா அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் வெளிநாட்டு மற்றும் உள்நாடடு சந்தைகளில் இனிமேல் கடன் வாங்கி நாட்டை கடனாளியாகக்க மாட்டோம் எனக்கு கூறிய அநுர குமார் திசாநாயக்க திரைச்சேறி பிணைமுறி மூலம் சுமார் 400 பில்லியனுக்கு மேல் கடந்த நாட்களில் கடன் பெற்றுள்ளார்.
அநுர குமார பழைய முறையிலேயே பொருளாதாரத்தை கொண்டு செல்கிறார். புதிதாக ஒன்றுமிலலை. அவர்கள் சொல்வதை செய்யாத பிரச்சினை உள்ளது. ரணில் விக்ரமசிங்க, நெருக்கடியான நிலயில் கஷ்டமான முடிவுகளை எடுத்து
பொருளாதாரத்தை மேன்படுத்தியதினால் உள்நாட்டு சந்தையில் கடன் பெற முடிந்துள்ளது.
ரணில் வந்தால் வரி அதிகரிக்கப்படும்.சஜீத், அநுர வந்தால
வரி குறைக்கப்பட்டு நிவாரணம் கிடைக்கும் என மக்கள் நினைத்துத்தான் ரணிலை மூன்றாம் இடத்திற்கு தள்ளினார்கள்.
பொருளாதார அபிவிருத்தி 4.2 ஆக அதிகரித்துள்ளது. இருப்பு
6 பில்லியன் டொலராக அதிகரிப்பு. வருமானம் அதிகரித்தது ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டத்தினிலாகும் என்பதை மக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளனர். அவர் பொருளாதாரத்தை சீர்செய்ததினால் இன்று கடன் எடுக்கின்றனர். வங்குரோத்து அடைந்திருந்தால் கடன் எடுக்க முடியாது. பாசாங்கு இல்லாமல் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2025ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள உயர்வு, சம்பள முரன்பாட்டை நீக்கல், புதிதாக வருமானத்தை ஈட்டும் வழிகள், சர்வதேசம் நானய நிதியம் கூறும் மறுசீரமைப்பு வரி அதிகரிப்பு போன்றவற்றை வெளிப்படுத்த வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் எமது குழுவிலே பலம் வாய்ந்தவர்கள் உள்ளனர். நாம் மக்களுடன் அதி நெருக்கமாக இருக்கும் கட்சி.
ஜேவிபி யின் 39 பேர் பாராளுமன்றத்தில் இருந்த காலம் உண்டு. அவர்களின் எத்தனை பேர் இன்று போட்டியிடுகிறார்கள். மூன்று பேரே களத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் கூறுவது எமது பிரலமானவர்கள் போட்டியிடுவதில்லை என்கிறார்கள்.
அநுரகுமார ஜனாதிபதியானதினால் புன்னியத்திற்கு பாராளுமன்ற வர எதிர்பார்துளளனர்.
ரணில் விக்ரமசிங்க எடுத்துச் சென்ற திசைக்கே அநுரகுமாரவும் நாட்டை கொண்டு செல்கிறார். ரணிலின் கொள்கையையே பின்பற்றுகிறார். புதிதாக ஒன்றுமில்லை. அப்படியானல் அவர்களுக்கு வாக்களிப்பதை விட எமக்கு வாக்களிப்பதே சிறந்தது. ஏனெனில் நாம் அந்த வேலை திட்டங்களை முன்னெடுத்துச் சென்ற அனுபவம் எமக்கு உள்ளன என லான்சா தெரிவித்தார்.