அதுரலியே ரத்தன தேரரை பிணையில் விடுவிக்க நுகேகொடை மேலதிக நீதவான் 12.09.2025 உத்தரவிட்டுள்ளார்.
குறித்த தேரருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு தனிப்பட்ட பிணைகளும், 10,000 ரூபாய் ரொக்கப் பிணையும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரத்தன தேரர், கடந்த மாதம் 29 ஆம் திகதி வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது