அண்மையில் இடம்பெற்ற மாரவில மற்றும் சீதுவ துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன், நடப்பாண்டில் இதுவரை பதிவான மொத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில், 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை நடைபெற்று வரும் விசாரணைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவங்களின் போது மோட்டார் சைக்கிள்களில் சென்ற 15 நபர்களும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 150 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

July 23, 2025
0 Comment
6 Views