வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் இருப்பதோடு, அது மேற்கு, வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிப்பதால் அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










