ஏ.எஸ்.எம்.ஜாவித் 2024.06.29
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 74வது வருடாந்த மாநாடு சனிக்கிழமை (29.06.2024) மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வை.எம்.எம்.ஏ.பேரவை தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ ஹமீட்(Ihsaan A Hameed) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமி லுட்பூ துர்கத்(Semih Lutfu Turgut) பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எல்.ரீ.பி.தெஹிதெனியவும்(L.T.B Dehideniya) கலந்து கொண்டார்.
வை.எம்.எம்.ஏ பேரவையைச் சேர்ந்த போஷகர் காலித் எம் பாரூக்(Khalid M Farook),சட்டத்தரணி அஸ்ரப் ரூமி(lawyer Ashraf Roomi), தேசிய பொருளாளர் ரி.டி.எம்.பிர்தெளஸ்(T.D.M.Firdaws), பேரவை தேசிய பொதுச் செயலாளர் ஆசிப் சுக்ரி(ASIF Shukri) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், முன்னாள் கொழும்பு மேயர் அஸாத் சாலி உள்ளிட்ட பலர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
தலைமையுரையை பேரவை தேசிய தலைவர் Ihsaan A Hameed நிகழ்த்தியதுடன் தேசிய பொது பொருளாளர் ரி.டி.எம்.பிர்தெளஸ் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கெளரவ அதிதி நீதிபதி எல்.ரீ.பி.தெஹிதெனிய, பிரதம அதிதி இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமி லுத்பூ துர்கத் ஆகியோர்கள் உரை நிகழ்த்தினர்.
நாடளாவிய ரீதியிலுள்ள வை.எம்.எம்.ஏ பேரவை உறுப்பினர்களுக்கு விசேட விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
வை.எம்.எம்.ஏ பேரவையினால் சுபான் நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து சிறப்பித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி எல்.ரீ.பி.தெஹிதெனிய, பிரதம அதிதி இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமி லுட்பூ துர்கத் ஆகியோர்கள் பேரவையினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நன்றியுரையை பிரதி பொதுச் செயலாளர் பராஸ் பாரூக் நிகழ்த்தினார்.
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/1d46ce2d-3253-4414-8d4d-a3564511c84b-1024x754.jpeg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/34bca367-6a31-4913-9a71-a6a3a7eb3450-1024x743.jpeg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/352dbccf-a44a-4538-a18e-85858d42d9db-1024x682.jpeg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/b7d18382-0558-408e-9d76-f8c8f3c857ff-1024x682.jpeg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/b73f52c5-4dd9-4931-b88e-afae8046e610-1024x502.jpeg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/dbb29732-d5d2-4842-9921-0beb6d995136-1024x457.jpeg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/e706319b-5666-418d-aa6d-a6b0552c562f-1024x580.jpeg)