இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு பிடிப்பன மீன் விற்பனை நிலையத்திற்கு முன்பாக உள்ள இடத்தை வியாபார நோக்கத்திற்காக டென்டர் வழங்குவதற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு ஒன்று உள்ளது இது தொடர்பான ஆவணத்தை சபையில் சமர்பிக்க முற்பட்ட வேளையில் அதற்கு நகர பிதா அனுமதி வழங்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் குழு தலைவி திலினி ஜயகொடி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது குற்றம் சாட்டினார்.
பிடிப்பன மீன் விற்பனை நிலையத்திற்கு முன்பாக வீதியில் வியாபாரம் செய்வதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்கும் நீர்கொழும்பு மாநகர சபை கடந்த காலங்கள் முதல் டென்டர் மூலம் குறித்த இடத்தை வழங்கி வந்தது.
இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாநகர சபைக்கு சொந்தமில்லாத இடத்தை குத்தகைக்கு விட முடியாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.
அந்த தீர்ப்புக்கு எதிராகச் சென்று தொடர்ந்தும் அந்த இடங்களுக்கு மாநகர சபை டென்டர் கோருவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதனையே சபை நடவடிக்கையின் போது கடிதங்கள் மனுக்கள் சமர்பிக்கும் சந்தர்பத்தில் அந்த ஆவணத்தை சமர்பிக்க முற்பட்டேன். அதற்கு மேயர் இடம்தரவில்லை.
நகரத்தின் பிரச்சினகளை
சட்ட விரோத நடவடிக்கைகளை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் சுட்டிக் காட்ட முற்பட்ட போது எமக்கு இடமளிக்கவில்லை.
அதனால்தான் ஊடகங்கள் முன்னால் வந்து கூறுகிறேன்.
மோசடியான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து சிறந்த ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக வந்த இவர்களும் அவ்வாரே நடந்து கொள்கின்றனர்.
சட்டத்தை நன்கு அறிந்த அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான வழக்கறிஞரான மேயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் இருப்பது குறித்து தான் மிகவும் அதிர்ச்சி அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நகரில் சட்டவிரோதமான ஒரு விஷயத்தைத் தடைசெய்யும் நீதிமன்றத் தீர்ப்பை ஒரு உள்ளூரிட்ச்சி மன்றம் செயல்படுத்தாமல் இருக்க முடியுமா? இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும். இது குறித்து துங்கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் விபரங்களை கேட்டபோதும் உரிய தெளிவு கிடைக்கவில்லை என்றார். நீர்கொழும்பு மாநகர சபை மேயர் சட்டதரணி ரொபட் ஹீன்கெந்தவிடம் இது குறித்து கேட்டபோது சட்டத்திற்கு மேலால் எனக்கோ எவருக்கோ இருக்க முடியாது. நீதிமன்றத் தீர்ப்பு குறித்து உண்மையாக நான் அறிந்திருக்கவில்லை. இன்று சபையில் நடந்த சம்பவத்தின் பிறகுதான் அது குறித்துத் தனக்குத் தெரிய வந்தது என்றும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர் கட்சி உறுப்பினர் அதனை சபையில் சமர்பித்த முறையில் சிக்கல் உள்ளது. சபையில் கடிதங்களை, மனுக்களை சமர்பிப்பதாக இருந்தால் தனி ஒருவர் அல்லது அமைப்பின் பெயர் விலாசம் குறிப்பிட்டு சமர்பிக்க வேண்டும். வெப்தளத்தின் ஊடாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணத்தை சமர்பிக்க முடியாது. சமர்பிக்கப்படும் ஆவணத்திற்கு சபை பதில் அளிக்க வேண்டும். வெப்தளத்திற்கு எவ்வாறு பதில் அளிப்பது என கேட்ட மேயர் குறித்த சந்தர்பத்தில் உறுப்பினர் ஒருவருக்கு அவரின் பெயரில் கடிதங்களையோ மனுக்களையோ சமர்பிக்க முடியாது. அதனால்தான் நான் அனுமதி வழங்கவில்லை.
டென்டர் வழங்குவதற்கு சபையில எடுத்த தீர்மாணித்தை சபை தீர்மாணத்திலேயே மாற்ற வேண்டும். தனியாக எனக்கும் செய்ய முடியாது.
நீதிமன்ற உத்தரவு தொடர்பான உண்மைகளை ஆய்வு செய்து முடிவை மதித்து அதற்கேற்ப செயல்படுவேன் எனக் கூறினார்.










