இஸ்மதுல் றஹுமான்
"சுத்தமான கடற்கரை கவரச்சிகரமான சுற்றுலா தலம்" எனும் தொனிப்பொருளில் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலை திட்டத்தில் 14 கடற்கரை மாவட்டங்களில் 258 கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யும் பனி 8500 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய படையணி மூலம் நேற்று 29ம் இடம்பெற்றது.
கம்பஹா மாவட்டத்தின் வேலை திட்டம் நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கம்பஹா மாவட்ட 141 படை பிரிவின் கட்டளை தளபதி பிரகேடியர் ரொஷான் தர்மவிக்ரம தலைமையில் 425 இராணுவ வீரர்கள் பங்குபற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. நீர்கொழும்பு குட்டிதூவயில் இருந்து பலகத்துறை வரையான 9.2 கிலோ மீட்டர் தூர கடலோரப் பிரதேசம் 3 மணி நேர காலப்பகுதில் சுத்தம் செய்யப்படுகின்றது.
இந்த நிகழ்வில் கம்பாஹா மாவட்ட மேலதிக செயலாளர் ஆசிரி விக்ரமசேன, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி, நீர்கொழும்பு மாநகர சபை முதல்வர் ரொபட் ஹீன்கெந்த, நீர்கொழும்பு, கொச்சிக்கடை,கட்டான பொலிஸ் நிலையங்களின் பொறுபதிகாரிகள், கடலோர பாதுகாப்பு அதிகார சபை, செஞ்சிலுவை சங்கம், நீர்கொழும்பு சுற்றுலா ஹோட்டல் சங்கம், மீனவ சங்கம், அரச தனியார் நிறுவனங்கள், போ வீல் கிளப் என்பனவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
பிரகேடியர் தர்மவிக்ரம ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது சகல மக்களுக்கும் அழகான சுற்றிடலை ஏற்படுத்தி சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தும் அரசின் கொள்கைகிணங்க இந்தப் பனி இடம்பெறுகின்றது. இங்கு பொதுமக்கள் மூலம் போடப்பட்டுள்ள கழிவுகள் கடல் மூலம் கரைக்கு வந்துள்ள கழிவுகளைம் அகற்ற ஏறபடுகின்றன. இங்கு எவ்வளவு அளவான சகழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதை அளவீடு செய்து தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெரிவிப்போம். அதற்கு தேவையான உபகரணங்களுடனை வந்துள்ளோம். சேகரிக்கப்பட்டு கழிவுகளை கழிவு முகாமைத்துவத்திற்காக நீர்கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.