மக்களுக்கு கூடுதல் நிவாரணங்களை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் 21.01.2025 பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் ஏற்கனவே ஓரளவுக்கு மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சில வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.