ஈரானின் குறிப்பிட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரான் வான்பரப்பை தவிர்க்க சில விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன .
இஸ்ரேல் தாக்குதலை நடத்தினால் மோசமான எதிர்வினை உடனடியாக ஆற்றப்படுமென ஈரான் வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் நிலைகள் மீது வான்தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.