கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பயகம, மஹர, கந்தானை மற்றும் மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு இம்மாதம் 24ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.