நாட்டில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலத்தின் பின்னர் இவ்வாறு கோழி இறைச்சியின் விலை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 150 ரூபாவால் கோழி இறைச்சியின் விலை குறைந்துள்ளதுடன், எதிர்வரும் வாரங்களில் மேலும் கோழி இறைச்சியின் விலை குறையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (19) கோழி இறைச்சி ஒரு கிலோ கிராமின் விலை100 ரூபாவினால் குறைந்துள்ளது.
இதேவேளை, ஆட்டு இறைச்சி ஒரு கிலோ கிராமின் விலை 3,300 ரூபாவாகவும், மாட்டிறைச்சியின் விலை 2,400 ரூபாவாகவும் உள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.