பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1, 700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் 19.04.2024 எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கறுப்புப்பட்டி அணிந்து கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்தமை மற்றும் வேதன உயர்வு வழங்காமை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது