இஸ்மதுல் றஹுமான்
கோவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் நீர்கொழும்பு வைத்திய சாலையில் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலயின் பிரதான சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் டவ்லிவ்.ஏ.எஸ்.ஆர். விகரமாரச்சி 17ம் திகதி அறிவித்துள்ளார்.
கட்டான, தெமன்ஹந்திய, புதியநகரைச் சேர்ந்த ரொட்னி பிரனாந்து எனும் 63 வயது நபரே மரணமடைந்துள்ளார்.
விசாரணை நடாத்திய நீர்கொழும்பு நகர திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் சிறி ஜயந்த விகரமரத்ன வைத்திய அறிக்கைகளுக்கு அமைய இரத்த அழுத்தம், நீரிழிவு, கோவிட் தொற்றின் நிமோனியா ஏற்பட்டமையினால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.