மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் 19.04.2024 பிற்பகல் 2 மணி அளவில் இடம்பெறவுள்ளன.
தேவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலித தெவரப்பெரும கடந்த 16 ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததுடன் அவருக்கு வயது 64.
2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், உள்நாட்டலுவல்கள், வடமேற்கு அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
பாலித தெவரப்பெரும பெரும் சமூகப் பணியை ஆற்றிய அரசியல்வாதியாக சமூகத்தில் முக்கிய இடம் பிடித்தவராவார்.