ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது.
ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், 11 சதவீதமான சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன.