ஐ. ஏ. காதிர் கான் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால், தேசிய ரீதியிலான சித்திரம் சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.
கீழ்க்குறிப்பிடும் பிரவுகளாக போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.
தரம் 1 முதல் 13 வரையிலான அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலை மாணவர்கள்,
ஆசிரியர்கள் பல்கலைக் கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்கள், தொழில் புரிவோர்கள் அத்துடன் வேறு நபர்களின் ஆக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, பெறுமதி வாய்ந்த பணப் பரிசில்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்படும்.
விண்ணப்ப முடிவு திகதி, மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆக்கங்கள், தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
மேலதிக விபரங்கள் கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.