ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குக் தீவுகளின் கொடியுடன் பயணித்த குறித்த கப்பல், அங்கு நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, ஓமான் வளைகுடாவில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் ஜாஸ்க் கடற்கரையிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனையடுத்து ஈரானிய அதிகாரிகளால், கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதுடன், அவர்களில் 21 இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில், 5 பேருக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், எவருக்கும் பாரிய பாதிப்பு ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.