.புத்தளம் தாருஸ்ஸலாம் மஸ்ஜிதில் பல்வேறு முன்மாதிரியான செயல்பாடுகள் நடைபெற்று வருவது வழக்கம். அதில் இம்முறை மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் வகையில் “தாருஸ்ஸலாம் சுய கற்றல் பகுதி” என்ற பெயரில் மாணவர்களுக்கான கற்றல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தாருஸ்ஸலாம் மஸ்ஜிதின் சுய கற்றல் பகுதி இன்றிலிருந்து செயற்பாட்டுக்கு வருகிறது.
தற்போதைய காலப்பகுதியில் வீட்டில் அமைதியான சூழலில் மாணவர்கள் கற்பது பாரிய சவாலாக உருவெடுத்துள்ள இவ்வேளையில் ஒவ்வொரு மஸ்ஜிதும் மாணவர்களுக்கு என சுய கற்றலுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற காலத்தின் தேவையை கருதி முன்மாதிரியாக எமது பள்ளியில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாருஸ்ஸலாம் சுய கற்றல் பகுதியிலே விரும்பிய மாணவர்கள் வந்து சுய கற்றலில் ஈடுபடலாம். மேலதிகமாக பாடப்பகுதிகளில் விளக்கம் தேவைப்படும் பொழுது மஹல்லாவாசிகளில் துறை சார்ந்தவர்கள் மூலம் அது விளக்கமளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது