புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் வசதிக்காக 17.04.2024 அதிகமான பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில் 9,000 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, 17.04.2024 முதல் ரயில் சேவைகளும் வழமை போல் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் இந்திபொலகே தெரிவித்துள்ளார்.