வெளிவிவகார அமைச்சின் தகவல்களின்படி, ஈரான் ஜனாதிபதி ஏப்ரல் 24 ஆம் திகதி இலங்கை விஜயம் மேற்கொள்ளமாட்டார் என உள்ளூர் ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரான் டைம்ஸ் (Tehran Times) எனும் ஈரான் பத்திரிகையில் ஈரான் ஜனாதிபதி மே மாதம் கொழும்புக்கு வரவுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜய திகதி இந்த வாரம் அறிவிக்கப்படும்.
இந்த விஜயத்தின் போது பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்கள் ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளன.
உமா ஓயா பல்நோக்கு திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர் மின் உற்பத்தி நிலையங்களும் அடங்கும்.
உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.