தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (14) விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு 7.30 மணிக்கும், கோட்டையில் இருந்து காலி வரை இரவு 7.25 மணிக்கும் இரண்டு விசேட தொடருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, போதுமக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தூரப்பிரதேசங்களுக்கான விசேட பேருந்து சேவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது